யாழ். பல்கலை மாணவர்கள் மீது மது போதைக் கும்பல் தாக்குதல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஓட்டோ ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினரே மாணவர்களை வழி மறித்துத் தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles