சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் 28 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அதற்கு சமாந்தரமாக உப மாநாடுகளும் நடைபெறும். அவ்வாறானதொரு மாநாட்டில் பங்கேற்று, ரஞ்சன் தொடர்பில் முறையிடவே அவர் ஜெனிவா செல்லவுள்ளார்.
ஹரீனுடன் அநேகமாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.