முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்தார்.
கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஓரணியில் செயற்படுவோம் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர் பீரிஸ் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.










