‘ரணிலுக்கு எதிராகவே சபைக்குள் போராட்டம் – ஆளுங்கட்சி வாழ்த்து’

” ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டம் நடத்துகின்றனர். ரணிலுக்கு அஞ்சுகின்றனர். நாங்கள் ரணிலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு தற்போது நடைபெற்றுவருகின்றது. எரிபொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை குறைக்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டம் நடத்துகின்றனர். கோஷங்களையும் எழுப்புகின்றனர்.

இதனால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும், சபை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையிலேயே சாந்த பண்டார எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

Related Articles

Latest Articles