ரணிலை மிரட்டிய சஜித் – பாலித தெவரப்பெரும வெளியிட்ட தகவல்!

” ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தலைமைப்பதவிக்கு பொருத்தமற்றவர்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த தலைவரான கரு ஜயசூரியவை களமிறக்கவே ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டிருந்தார். வெற்றிக்கான வியூகங்களையும் வகுத்திருந்தார்.

ஆனால் கருவை களமிறக்கினால் தான் தனித்து போட்டியிடுவார் என சஜித் மிரட்டினார். சஜித் வேட்பாளரானதால்தான் ஜே.வி.பியின் ஆதரவும் கிடைக்கவில்லை.

 

ரணிலால் முடியாது என்ற கருத்தை மங்களவே உருவாக்கினார். ரணிலால் என்ன முடியாது? அவரை நம்பிதான் தற்போது நாடு உள்ளது. தூரநோக்கு சிந்தனையுடைய தலைவரே அவர்.”- என்றார்.

Related Articles

Latest Articles