ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பட்டுள்ள விசேட தூது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதசெயல்களைக் கண்டித்தும், நீதிக்காகவும் அறவழியில் போராட்டங்களை நடத்தவும், சவால்களை சட்டரீதியாக எதிர்கொள்வதற்குமான வியூகத்தை ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துவருகின்றது. இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் சந்திப்புகளை நடத்திவருகின்றது.

அனைத்து சக்திகளையும் ஓரணியில் திரட்டி, அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள சிற்சில முடிவுகளை மீளப்பெற வைப்பதே இதன் நோக்கமாகும்.

இந்நிலையில் இதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தயின் உறுப்பினர்கள் சிலர் ரணிலை நேரில் சந்தித்து இது பற்றி கலந்துரையாடியுள்ளனர் என அறியமுடிகின்றது.

ரணிலுக்கு அனைத்துலக மட்டத்தில் தொடர்புகள் உள்ளன, சட்டரீதியிலான அனுபவமும் உள்ளது. இதற்கு புறம்பாக ராஜபக்சக்களுடனும் நல்லுறவு இருக்கின்றது. எனவேதான் ரணிலுக்கு தூது அனுப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உள்ளதாக கூறப்படுகின்றது. எனவே, அரசின் நோக்கத்தை தோற்கடிக்க ரணிலும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளாராம்.

Related Articles

Latest Articles