ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின், நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த நடவடிக்கை வீதி அதிகார சபையினரும் பொலிஸாரும் இணைந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று புதன்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி குறித்த பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததோடு, 53 பேர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக கனரக வாகனங்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
இவ்வீதி தொடர்பாக தனியான குழு ஒன்றினை அமைத்து எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின் போது முக்கிய கவனம் செலுத்தி நிரந்தர முடிவு எடுக்கப்படும் எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.
