ரத்தாகிறது கூட்டு ஒப்பந்தம் – வெளியாகிறது விசேட வர்த்தமானி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ட்ரூ சிலோன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையினால், சம்பளம் நிர்ணயிக்கப்பட்டமையினாலேயே, கூட்டு ஒப்பந்தம் இரத்தாகின்றது எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Paid Ad
Previous articleமைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம் – பேராயர் வலியுறுத்து
Next articleகித்துல்கலவில் இடம்பெற்ற விபத்தில் டயகம இளைஞன் பலி!