ரயிலில் பயணித்த வெளிநாட்டு யுவதி சுரங்கத்தில் மோதி படுகாயம்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் வந்து கொண்டிருந்த உடரட்ட மெனிக்கே ரயிலில் நேற்று (15) பயணித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் புகையிரதத்தில் இருந்து ரயில் பாதையில் உள்ள சுரங்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் 23 வயதுடைய பிலோஸ் அனஸ்தாசியா என்ற உக்ரைன் யுவதியே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இவர் குடும்பத்தாருடன் எல்ல பகுதிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஒஹியா மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

காயமடைந்த யுவதி குறித்த ரயிலில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.என்.ஜே.சனத்குமார தலைமையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

ராமு தனராஜா

Related Articles

Latest Articles