ரயில் பயணச்சீட்டுக்கு தட்டுப்பாடு

ரயில் பயணச்சீட்டுக்கு தட்டுப்பாடு காணப்படுவதால், அதனை விரைவில் தீர்க்குமாறு ரயில் நிலைய அதிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் அடுத்த வாரத்திற்குள் அலவ்வ ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படும் என அதன் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ரயில் நிலைய அதிபர் தொடர்ந்து டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தும், அதற்கான டிக்கெட்டுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அச்சிடுவதில் காணப்படும் தாமதம் தான் இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles