இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்று விவசாய அமைச்சர் லால்காந்த கூறினார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“நாட்டில் உணவு தட்டுப்பாடு இல்லை. உணவுப் பாதுகாப்பு என்பது சிறந்த மட்டத்தில் உள்ளது. எனவே, உணவு பற்றாக்குறை குறித்து மக்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
எல் நினோ காலநிலை பற்றி பேசி, இது பற்றி அச்சமூட்டுகின்றனர். நாம் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றோம். எனவே, பாரிய தாக்கம் எதுவும் எமக்கு இல்லை.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, வெளிநாட்டில் இருந்து தற்போது இலங்கைக்கு டின்மீன் இறக்குமதி செய்யப்படுவதில்லை. இப்படி பல நல்ல விடயங்கள் நடந்தாலும், எதிர்மறையான விடயங்கள் பற்றியே சமூகத்தில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
