ரயில் பயண கட்டணங்களை 100 வீதத்தினால் அதிகரிப்பதில் எவ்வித முரண்பாடும் கிடையாது- ரயில் நிலைய அதிபர்கள்

ரயில் பயண கட்டணங்களை 100 வீதத்தினால் அதிகரிப்பதில் எவ்வித முரண்பாடும் கிடையாது என ரயில் நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே திணைக்களத்தின் நட்டம் மற்றும் எரிபொருள் விலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதனை ஏற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சில ரயில் பயண கட்டண பிரிவுகள் 100 வீதத்திற்கு பதிலாக 200 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பயணிகளினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு மாதாந்த பருவச் சீட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு அதிக அளவில் ரயில் பயண கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கு தீர்வொன்றை முன்வைப்பார் என தான் நம்புவதாகவும் ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரயில்வே திணைக்களத்தை தனியார் மயப்படுத்துவதற்கான தேவை கிடையாது எனவும் அதனை அரசாங்கமே தொடர்ந்து நடத்திச் செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles