ரஷ்ய நிறுவனங்கள்மீது ஜப்பான் பொருளாதாரத் தடை விதிப்பு!

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரஷ்யாவின் 29 நிறுவனங்கள்மீது ஜப்பான் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா 2023ஆம் ஆண்டு போர் தொடுத்தது.
இதயைடுத்து அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

எனவே உக்ரைனுக்கு ஆயுதம் விநியோகம், பொருளாதார உதவிகளை அந்த நாடுகள் வழங்குகின்றன.

அதேபோல் ரஷ்யாமீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகிறது.

அதன்படி உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷ்யாவை சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம் மற்றும் இயந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷ்ய இராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Latest Articles