இராகலை நகரில் கட்டாக்காலி மாடுகளின் இடையூறு காரணமாக வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக இராகலை நகரில் கட்டாகாலி மாடுகள்,நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடைகளில் தொங்கவிடப்படும் வாழைப்பழங்கள் போன்ற பொருட்களை இழுத்து செல்வதாகவும் விற்பனை செய்யப்படும் பொருட்களில் கட்டாகாலிகள் முகர்ந்து பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வலப்பனை பிரதேச சபைக்குரிய நகரம் என்பதால் உரிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு நகரில் கட்டாக்காலிகளின் நடமாட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










