” 2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சமூக சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கான நடவடிக்கை 2016 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.”
இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர்,
” ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக நாட்டில் அதற்கான சூழலை உருவாக்குவதற்குரிய தேவைப்பாடு இருந்தது.
இதற்கமைய மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணிலுக்கிடையில் அரசியல் முறுகல் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர் அப்போதைய ஆட்சி பலவீனப்படுத்தப்பட்டது. அந்த நடவடிக்கை மட்டும் போதுமானதாக இருக்கவில்லை.
ஏனெனில் 2015 இல் மக்கள் வழங்கிய ஆணை வலிமை மிக்கது. அதனால் ராஜபக்சக்களுக்கு அரசியல் மேடையில் இடம் எஞ்சி இருக்கவில்லை. எனவே, தமக்கான சூழ்நிலையொன்றை ஏற்படுத்துவதற்கு ராஜபக்சக்கள் முற்பட்டனர்.
இனவாத சிங்கள மற்றும் இனவாத இஸ்லாம் குழுக்கள் உருவாக்கினர்.” – என்று குறிப்பிட்டார்.
முஸ்லிம் விரோத போக்கை உருவாக்கினார்கள். மின்சார கதிரை மட்டும் அல்ல இப்படி பல கதைகள் உள்ளன. ஆட்சிக்கு வருவதற்குரிய சமூக சூழ்நிலையை 2016 இல் இருந்தே உருவாக்கினார்கள். முஸ்லிம் இளைஞர்கள் இலங்கையில் வாழ்ந்து பயனில்லை என்ற நிலையை உருவாக்கி இருந்தார்கள். இப்படிதான் தாக்குதலுக்குரிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாறாக வெறுமனே தாக்குதல் நடக்கவில்லை. புலனாய்வு தகவல் என்னவென்பது எனக்கு தெரியாது.
புலனாய்வு பிரிவு, பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு வலுவாக இருந்தால் எப்படியான சமூக சூழ்நிலையை உருவாக்கினாலும் அதனை தடுத்து நிறுத்த முடியும். ஆனால் தாக்குதல் குறித்து புலனாய்வு தகவல்கள் கிடைத்தும், அமைப்புகள் சுட்டிக்காட்டியும் அவை ஆட்சியாளர்களால் கவனத்தில் எடுக்கப்படவில்லை. சஜித், ரணில் போன்ற தலைவர்கள் தேசிய பாதுகாப்பை பூஜ்ஜிய நிலைக்கு தள்ளியவர்கள்.” – என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
