ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்​டிகரில் உள்ள முலான்​பூரில் நடை​பெறும் எலிமினேட்டர் ஆட்டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​கள் மோதுகின்​றன.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி லீக் சுற்​றில் 14 ஆட்​டங்​களில் 8 வெற்றி, 6 தோல்வி​களு​டன் 16 புள்​ளி​கள் பெற்று கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​தித்து இருந்​தது.

அதேவேளை​யில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 9 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 18 புள்​ளி​களை குவித்து 3-வது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறி​யிருந்​தது.

சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி இந்​தத் தொடரின் தொடக்கத்தில் சற்று மந்​த​மாகவே ஆரம்​பித்​தது. ஆனால், தொடர்பாதி நிலையை தாண்​டிய பிறகு, தங்​களின் அசாத்தியமான ஃபார்​மைக் கண்​டறிந்து தொடர் வெற்​றிகளைக் குவிக்​கத் தொடங்​கியது.

குறிப்​பாக, கடைசி 7 லீக் போட்​டிகளுக்கு அந்த அணி​யின் வழக்​க​மான கேப்​டன் பாட் கம்​மின்ஸ் திரும்பியது அவர்​களுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்​தது. அவர் தலை​மை​யில் விளை​யாடிய அந்த 7 போட்​டிகளில் 5-ல் சன்ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி வெற்றி பெற்​றது.

நடப்பு தொடரின் லீக் சுற்​றில் 2 முறை ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை ஹைத​ரா​பாத் அணி வீழ்த்தி உள்​ளது. இதனால் நாக் அவுட் சுற்​றில் அந்த அணி மிகுந்த நம்​பிக்​கை​யுடன் களமிறங்குகிறது.

ஹைத​ரா​பாத் அணி​யின் பேட்​டிங் வரிசை​யில் அபிஷேக் சர்மா 563 ரன்​களும், டிரா​விஸ் ஹெட் 393 ரன்​களும், இஷான் கிஷன் 569 ரன்​களும், ஹென்​ரிச் கிளாசன் 606 ரன்​களும் குவித்து வலு​வாக உள்​ளனர். இவர்​கள் ராஜஸ்​தான் அணி​யின் பந்து​வீச்சு துறைக்​கும் மீண்​டும் ஒரு முறை அழுத்​தம் கொடுக்கக்கூடும்.

ரியான் பராக் தலை​மையி​லான ராஜஸ்​தான் அணி முதல் 4 ஆட்டங்​களில் தொடர்ச்​சி​யாக வெற்​றிகளை குவித்து மிரட்​டியது.

ஆனால் அதன் பின்​னர் விளை​யாடிய 8 ஆட்​டங்​களில் 6-ல் தோல்வி அடைந்​தது. எனினும் அதன் பின்னர் சுதா​ரித்​துக் கொண்டு செயல்​பட்டு வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்கடி​யில் கடைசி 4 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்​றில் நுழைந்​தது. 15 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 583 ரன்​களும், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 397 ரன்​களும், துருவ் ஜூரெல் 458 ரன்​களும் விளாசி டாப் ஆர்​டரில் வலு​வாக திகழ்​கின்​றனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்​கூடும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் மும்பை அணிக்கு எதி​ரான ஆட்டத்​தில் ஜோப்ரா ஆர்ச்​சர் அற்​புத​மாக செயல்​பட்டு இருந்​தார். நடப்பு சீசனில் ஜோப்ரா ஆர்ச்​சர் 21 விக்​கெட்​களை சாய்த்துள்ளார்.

அவருக்கு உறு​துணை​யாக நந்த்ரே பர்​கர், பிரிஜேஷ் சர்மா ஆகியோ​ரும் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்​தி​யிருந்​தனர். சுழற்​பந்து வீச்​சில் இந்த சீசனில் அறிமுக​மான யாஷ் ராஜ் பூனியா கவனம் ஈர்த்து வரு​கிறார். இந்த வேகப்​பந்து வீச்சு துறை சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யின் டாப் ஆர்​டர் பேட்​டிங்​கிற்கு நெருக்​கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

ஹைத​ரா​பாத் அணி​யின் பந்​து​வீச்​சில் இஷான் மலிங்கா நடப்பு தொடரில் 19 விக்​கெட்​கள் வீழ்த்தி அசத்தி உள்​ளார். அதில் பவர்​பிளே​வில் சிறப்​பாக செய்​லபட்டு வரு​கிறார். பிரஃபுல் ஹிங்​கே, ஷகிப் ஹுசைன் போன்ற இளம் வேகப்​பந்து வீச்​சாளர்​களு​டன் பாட் கம்​மின்​ஸும் தனது அனுபவத்​தால் பலம் சேர்த்து வரு​கிறார்.

சுழற்​பந்து வீச்​சில் ஷிவாங்க் குமாரும் உறு​துணை​யாக செயல்பட்டு வரு​கிறார். போட்டி நடை​பெறும் முலான்​பூர் மைதானத்​தில் நடப்பு சீசனில் லீக் சுற்​றில் நடை​பெற்ற 3 ஆட்டங்களில் 220-க்​கும் அதி​க​மான ரன்​கள் குவிக்​கப்​பட்​டிருந்​தன. அதி​கபட்​ச​மாக பஞ்​சாப் கிங்​ஸ் 254 விளாசி​யிருந்​தது. இதனால் இன்​றைய ஆட்​டத்​தில்​ அதி​க அளவி​லான ரன்​கள்​ குவிக்கப்படக்கூடும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles