ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் மலரவுள்ள ‘ஐக்கிய மக்கள் கூட்டணி’யில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவுக்கு, பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
ஐ.தே.கவின் புதிய பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ருவான் விஜேவர்தனவை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்ட சஜித் பிரேமதாச,
வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இணைந்து பயணிக்க முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
இந்நிலையில் எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பது தொடர்பில் பரீசிலிக்கப்படும் என ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
” ஐக்கிய தேசியக் கட்சி தனிக்கட்சியாகவும், ஐக்கிய மக்கள் சக்தி தனிக்கட்சியாகவும் இயங்கும். ஆனாலும் தேர்தல்களின்போது கூட்டணி அமைத்து போட்டியிடலாம். அதில் எவ்வித பிரச்சினையும் எழாது.” – என்று இரு அணிகளின் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
