நேற்று (26) இரவு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளதாக ருஹுனுபல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.
நேற்றிரவு பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த பகுதியில் சத்தம் எழுந்ததாக பிரதேசவாசிகளால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பல்கலைக்கழக கண்காணிப்பாளர் அந்த இடத்துக்குச் சென்று தகவல் அறிந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், அவர் மீண்டும் தங்கும் இடத்துக்கு வந்தபோது, அவரது மனைவி மற்றும் தாயை மாணவர்கள் சிலர் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
