ரூ.1700 வழங்க மறுக்கும் கம்பனிகளே வெளியேறு!

தமக்கான நாள் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி தலவாக்கலை, நானுஓயா தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகள் தோட்டங்களைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் இடித்துரைத்தனர்.

தாம் கடின உழைப்பை வழங்குகின்றபோதிலும் அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும், இந்நிலைமை தொடரக்கூடாதெனவும் தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாமென தோட்ட நிர்வாகம் அச்சுறுத்துகின்றது என சுட்டிக்காட்டி, அதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

எஸ்.சதீஸ்

Related Articles

Latest Articles