லங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தில் கைக்குண்டு மீட்பு! பொலிசார் சுற்றிவளைத்து சோதனை!!

லங்கா ஹொஸ்பிட்டில் வளாகத்தின் வாகனத் தரிப்பிட மலசல கூடத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து சோதனை நடத்தி கைக்குண்டை மீட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை சோதனை செய்து பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வைத்தியசாலைக்கு முக்கிய பிரமுகர்கள் வந்துசெல்வது வழமையாக இருக்கும் நிலையில், கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Paid Ad
Previous articleகோழிகளை நரியிடம் ஒப்படைப்பதா? கப்ராலின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு!
Next articleதேர்தல் கோரிய சஜித்மீது சீறிப்பாய்கின்றது மொட்டு கட்சி!