‘லயன்களில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றால் அது ஆபத்தாக மாறிவிடும்’

மலையகத்தில் அண்மைக்காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது மிக கவலைக்குரிய விடயமாகவும், கடந்த மூன்று தினங்களுக்குள் ஹற்றன், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன. ஆகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

எரிவாயு அடுப்பு வெடிப்பு தொடர்பாக ஹட்டனில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,..

மலையகத்தை பொறுத்தளவில் பெரும்பாலான மக்கள் தொடர் குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான ஒரு சூழ் நிலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டால் முழு தொடர் குடியிருப்பினையே அது அழித்து விடும். ஆகவே இவ்வாறான சம்பவங்கள் மக்களை அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் இம்மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles