லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அண்மையில் காட்டுத்தீ பரவியது.

இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரிடரால் இறந்திருக்கிறார்கள். 12,000 கட்டிடங்கள் உள்படப் பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். 163 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீக்கிரையானது. 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பொருள்சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சற்றே தணிந்த காட்டுத்தீ தற்போது மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்குப் பகுதியில் தீ பரவி வருகிறது. இப்போது மூண்டுள்ள காட்டுத்தீ 21 சதுர கிலோமீட்டர் அளவில் எரிந்து வருகிறது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.

இதற்கிடையே, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்களும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதேவேளை, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு அமெரிக்கா கோரும் பட்சத்தில், ஆஸ்திரேலிய படைகளை அனுப்புவதற்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles