லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்: புலம்பெயர்ந்தோர்மீது கடும் நடவடிக்கை!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வெடித்த கலவரத்தால், புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு போராட்டங்கள வெடித்தன.

இந்நிலையில், ஜனாதிபதி டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத குடியேறிகளாலும், குற்றவாளிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
இப்போது வன்முறை, கிளர்ச்சி கும்பல்கள் எங்கள் நாடு கடத்தல் நடவடிக்கைகளை நிறுத்த தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சட்டவிரோத கலவரங்கள் எங்கள் உறுதியை வலுப்படுத்துகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் உத்தரவிட்டு உள்ளேன். லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படும். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப் படுவார்கள். அவர்களின் பிடியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் விடுவிக்கப்படும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles