அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
குறித்த தரப்பினர் ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் பொலிஸ் மா அதிபர் குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதேவேளை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு 72 மணித்தியால தடுப்புக்காவலில் உள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
