வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை

ரஷ்யா, வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் குறித்த பயண எச்சரக்கை பட்டியலில் ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

மேற்படி நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் – ரஷிய போர், சிரியாவின் உள்நாட்டு போர் ஆகியவை ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன. சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கல் இருக்கிறது. பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles