வடக்கில் படை வசமுள்ள காணிகளை விடுவிப்போம்

வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் இந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ்ப்பாணம் வந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுமா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம்.

பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம். நிச்சயமாக இந்த விடயத்தில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவோம்.

நாம் ஏற்கனவே சில வீதிகளை விடுவித்துள்ளோம். காணிகளையும் விடுவிப்போம். இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்போதும் கரிசனையுடையவர்களாகவே உள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles