” வடக்கு, கிழக்கில் பௌத்த புராதன சின்னங்கள் வேகமாக அழிக்கப்பட்டுவருகின்றன. எனவே, வடக்கு, கிழக்கு பிரிந்தால் நிலைமை என்னவாகும்.” – என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பௌத்த சாசனத்தை காக்க வேண்டுமெனில் நாட்டில் ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் தற்போது வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்பொருட்கள், புராதன சின்னங்கள் வேகமா கஅழிக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம் இதற்கு சிறந்த சான்று, நெடுங்கேணியில் இருந்த பௌத்த சின்னம் அகற்றப்பட்டு வேறொரு சிலை அங்கு வைக்கப்பட்தை நான் கண்டேன்.
இந்நிலைமையில் வடக்கு, கிழக்கு பிரிந்தாலோ, தனி நாடு உருவாகினாலோ என்ன நடக்கும்? எனவே ஒற்றையாட்சியை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம்.” – என்றார்.










