வடக்கு மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநரை நேற்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குவிய மையத்தை உருவாக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இவற்றைச் சாதகமாக ஆராய்வதாக ஆளுநர் உறுதியளித்தார் என்று வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles