” அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுடன்தான் எனது அரசியல் பயணம் தொடரும். அவருடன் இணைந்துதான் தேர்தலிலும் களமிறங்குவேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தலைமையில் பதுளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், வடிவேல் சுரேஷ் எம்.பியும் பங்கேற்றார்.
” வடிவேல் சுரேஷ் விரைவில் எம்முடன் இணைவார்.” என ஹரின் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
அதன்பின்னர் உரையாற்றிய வடிவேல் சுரேஷ்,
” இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஹரின் பெர்ணான்டோ, செயலாளர் நான். இருவரும் ஒன்றாகதான் இருக்க வேண்டும். எனக்கு கட்சி இல்லை. எனது கட்சி ஹரினின் கட்சி.” என்றார் வடிவேல் சுரேஷ்.
