வரலாற்றில் முதன்முறையாக அன்டார்டிகாவில் தரையிறங்கிய விமானம்

வரலாற்றில் முதல் தடவையாக A340 ஏயர்பஸ் விமானமொன்று அன்டார்டிகாவில் தரையிறங்கியுள்ளது.

Hi Fly விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. இம்மாதம் இரண்டாம் திகதி ஆபிரிக்காவின் கேப் டவுன் நகரிலிருந்து புறப்பட்ட விமானம் 51/2 மணித்தியால பிரயாணத்தின் பின் அன்டார்டிகாவில் தரையிறங்கியுள்ளது.

கப்டன் கரோல்ஸ் மிர்புரி என்ற விமானி விமானத்தை செலுத்திச்சென்று திரும்ப செலுத்தி வந்துள்ளார். நீல நிற பனிபடர்ந்த அன்டார்டிகா விமான நிலையம் தொழில்நுட்பரீதியாக விமானங்கள் தரையிறங்குவதற்கு உகந்த விமான நிலையம் அல்ல; ஒரு சிறந்த விமானியாலேயே இந்த சவால் மிக்க பயணத்தை மேற்கொள்ள முடியும்.

3000 மீட்டர் நீளமான இந்த ஓடுபாதையில் A340 விமானத்தை நிறுத்துவது எங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை என கரோல்ஸ் மிர்புரி தெரிவித்துள்ளார்.

மூன்று மணித்தியாலங்களுக்கு குறைவான நேரத்தை இந்த விமானத்தில் சென்றவர்கள் அண்டார்டிகாவில் செலவிட்டுள்ளனர். ஜோர்ஜ் ஹேர்பேர்ட் வில்கின்ஸ் என்ற அவுஸ்திரேலிய விமானப்படை விமானிமுதல் தடவையாக 1928ம் ஆண்டு லொக்ஹீட் வெகா மொனோ விமானத்தை டெசப்ஷன் தீவிலிருந்து புறப்பட்டு தரையிறக்கியிருந்தார்.

இந்த வெண்மையான கண்டத்தில் இன்று வரை விமான நிலையம் எதுவுமில்லை ஆனால் விமானங்கள் தரையிறங்கக்கூடிய 50 பிரதேசங்கள் உள்ளன. இதுவரை காலமும் அன்டார்டிகாவுக்கு செல்பவர்கள் கப்பல் முலமே பயணத்தை மேற்கொண்டு வந்தனர், 2019-20 காலப்பகுதியில் ரஷ்யா சில பரீட்சர்த்த விமானபயங்களை மேற்கொண்டிருந்தது. அன்டார்டிகா மீது அவுஸ்திரேலியாவும் ஆபிரிக்காவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Related Articles

Latest Articles