வலுக்கிறது அழுத்தம்! தரைவழி தாக்குதலை கைவிடுமா இஸ்ரேல்?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சுற்று பயணத்தை ஆரம்பித்தவேளை, காசாவில் உள்ள Al-Ahli Arab வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம், இஸ்லாமிய ஜிஹாத் பாலஸ்தீன போராளிகளின் ராக்கெட் தாக்குதலிலேயே வைத்தியசாலை அழிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. எனினும், இஸ்ரேல் இராணுவத்தின் இந்தக் கூற்றை பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் முற்றாக நிராகரித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்கு தான் ஜோர்தானுக்கு பயணம் மேற்கொள்ளப்போவதில்லை என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

” வைத்தியசாலைமீது நடத்தப்பட்டுள்ள வான்வழித் தாக்குதல் தாங்கிக்கொள்ள முடியாத சம்பவமாகும். இது அப்பட்டமான போர் விதிமுறை மீறல் என்பதுடன், மனித படுகொலையாகும்.” – என்று பாலஸ்தீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான பின்னர், அமெரிக்க ஜனாதிபதி, எகிப்து, ஜோர்தான் மற்றும் பாலஸ்தீன தலைவர்களுக்கிடையில் ஜோர்தான் அம்மான் நகரில் நடைபெறவிருந்த விசேட மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த பயணத்தின்போது இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சு நடத்தவுள்ளார். அதேவேளை இங்கிலாந்து பிரதமர் இன்று (19) இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கின்றார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காசாவில் வைத்தியசாலைமீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இந்தச் செய்தியைக் கேட்டதும் கோபமும் வேதனையும் அடைந்ததாகக் கூறியுள்ளார். அத்துடன், ” போரை நிறுத்துவதைத் தவிர வேறு எதையும் பேசுவதில் அர்த்தமில்லை.” – என்று நடைபெறவிருந்த மாநாடு குறித்து ஜோர்தான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு பிறகு, குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஊடக சந்திப்பை நடத்தினர், இதன்போது தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை ஊடகங்கள் காண முடிந்தது. இந்த தாக்குதலால், அரபு நாடுகளில் தற்போது மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை உருவாகி வருகின்றது. லெபனான், துருக்கி, ஜோர்தான், ஈராக் ,ஈரான் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த தாக்குதல் குறித்து தனது X சமூக தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இது மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடன் தான் இருப்பதாக அறிவிக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் வைத்தியசாலைகள் மற்றும் வைத்தியர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீன போரின் விளைவாக மேற்குலகுக்கு எதிராக புதிய அரபு முன்னணி அமைப்பதை முறியடிக்கும் நோக்கிலும், மேலும் சில இராஜதந்திர நகர்வுகளைக் கருத்திற்கொண்டுமே இஸ்ரேல் மற்றும் ஜோர்தானுக்கு அவசர பயணத்தை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டமிட்டார். எனினும், வைத்தியசாலைமீதான தாக்குதலால் எல்லா திட்டங்களையும் மாற்ற வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது என மேற்குலக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது இஸ்ரேலால் நடத்தப்பட்டுள்ள வான்வழி தாக்குதல் என்பதை ஏற்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் ஈரானை மையமாகக்கொண்டு புதிய அரபு மற்றும் வடக்கு ஆபிரிக்க பிராந்திய ஒத்துழைப்பு முன்னணி உருவாகிவருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எதிர்பாராத ஒன்றே இது. அதேபோல வைத்தியசாலைமீதான தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதனால் அமெரிக்க சார்பு மத்திய கிழக்கு நாடுகளுக்குகூட பாலஸ்தீனம்பக்கம் சாய வேண்டிய சூழ்நிலையை இது உருவாக்கியுள்ளது.

எனவே, இஸ்ரேலால் திட்டமிடப்பட்டுள்ள தரைவழி தாக்குதல் கைவிடப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய யூதக்குடியேற்றங்களையும் நிறுத்த வேண்டிவரும்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles