காலி மாவட்டத்தில் 200 ஸ்மாட் வகுப்பறைகள் ஸ்தாபிப்பு

காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் நவீன கணனி கூடங்கள் மற்றும் ஸ்மாட் திரைகளை நிறுவும் பணிகளை துரிதப்படுத்துவதற்கான இராஜதந்திர ஆவணங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கே ஆகியோரிடையில் 2023 ஜூன் 19ஆம் திகதி பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரணவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த இராஜதந்திர ஆவணங்களின் பரிமாற்றமானது, இலங்கை அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட கட்டமைப்பிற்கு இணங்க கொள்முதல் நடவடிக்கைகளை மறுசீரமைப்பதன் மூலம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நெறிப்படுத்தி துரிதப்படுத்துகிறது. இந்திய அரசின் நன்கொடை உதவியின் மூலம் அமுல்படுத்தப்படும் இந்த திட்டம், குறைந்த வசதிவாய்ப்புகள் உள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் கல்வித் துறையில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நன்கொடை அடிப்படையிலான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

இலங்கைக்காக இந்தியாவால் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த அபிவிருத்தி உதவியானது 5 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ள அதே நேரம் 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களிலும் நன்கொடை அடிப்படையில் கிட்டத்தட்ட 65 அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் தற்போது இருபதுக்கும் அதிகமான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுவருவதுடன் அவை பல்வேறு நிலைகளில் உள்ளன. குறிப்பாக இந்திய வீடமைப்பு திட்டம் மற்றும் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை ஆகியவை இலங்கையில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் நன்கொடை திட்டங்களில் முதன்மையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles