ஜனாதிபதியுடன் பனிப்போரா? பிரதமர் நிராகரிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அடியோடு நிராகரித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு நிராகரித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியவை வருமாறு ,

“ தேசிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கதைகள் கூறப்பட்டுவருகின்றன. இது எதிரணிகளின் எதிர்பார்ப்பாகும். ஆனால் உண்மை அதுவல்ல.

தேசிய மக்கள் சக்தியாக நாம் ஒற்றுமையாக செயல்பட்டுவருகின்றோம். தேசிய மக்கள் சக்திக்குள்தான் ஜே.வி.பியும் இருக்கின்றது.

ஜனாதிபதிக்கும், எனக்கும் இடையில் பனிப்போர் எனவும் கூறுகின்றனர். எனக்கு ஆதரவாக குழுவொன்று உள்ளது எனவும் கூறப்படுகின்றது. எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டது என்பதற்கு இப்படியான கட்டுக்கதை பரவல் சிறந்த சான்றாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles