மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா நாளை

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா நாளை (15) காலை கோலாகலமாக நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏற்கனவே மடு திருத்தலப் பூமியில் கூடிவருகின்றனர்.

இலங்கையின் அனைத்து சமூகத்தினரும் இணைந்து கொண்டாடும் இந்த விழாவானது, நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான அம்சமாகும்.

பெருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக பிரதேச அரச அதிகாரிகளினாலும் பாதுகாப்பு படையினரினாலும் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையான குடிநீர், சுகாதார வசதிகள், முதலுதவி மற்றும் மருத்துவ சேவைகள், மற்றும் விசேட பொலிஸ் பாதுகாப்பு என்பன மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.

Related Articles

Latest Articles