7 மாவட்டங்களில் இன்றும் கடும் வெப்பம்: மனநோய் குறித்தும் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் பதிவாகும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காலி தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெப்ப நிலை அதிகரிப்புடன் மனச்சோர்வு, கவலை போன்ற நோய்களும் பதிவாகி வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனறாகலை ஆகிய மாவட்டங்களில் இன்றும் கடும் வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related Articles

Latest Articles