வவுனியாவில், மின்சாரம் தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
45 வயதுடைய கார்த்திக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியைத் துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நீர் இறைக்கும் இயந்திரத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டமையால் குடும்பஸ்தர் ஒருவர் பாதிக்கப்பட்டார்.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










