ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித்தின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் முடிவை அவர் தற்போது எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்று ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுமாறு நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன். ரணில் விக்கிரமசிங்கவின்கீழ் அவர் ஐந்து வருடங்கள் கற்றுக்கொண்டால் நிச்சயம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க முடியும்.
அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க முற்பட்டால் இறுதியில் தோல்வி ஏற்படும். இவ்வாறு இரு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தால் அத்துடன் அவரின் அரசியல் வாழ்வும் முடிந்துவிடும். எனவே, சஜித்துக்கு மூளை இருந்தால் அவர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.” – என்றார்.










