வாசுவுடன் தொடர்பை பேணிய 10 எம்.பிக்கள் சுயதனிமையில்!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்பினைப் பேணிய 10 பேர் முதல் தொகுதி தொடர்பாளர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலருக்கும், அவர்களுடன் தொடர்புபட்ட பிரிவுகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தின் நான்கு நாட்களும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்ததாக படைக்கல சேவிதர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, எதிர்வரும் 13 மற்றும் 15ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பாராளுமன்றத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருப்பதாகவும் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles