நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
அதன்படி, விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்திற்கு தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
