விசாரணைகளை திசை திருப்பவே 2029 இல் நாமல் ஜனாதிபதி என்ற நாடகம் அரங்கேற்றம்

தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றை திசை திருப்பும் நோக்கிலேயே ‘2029 ஜனாதிபதி” என்ற கதையைக்கூற ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார் என மொட்டு கட்சியினர் கூறிவருவது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” 2029 இல் நாமல் ஜனாதிபதி என்ற தகவல் திட்டமிட்ட அடிப்படையிலேயே பரப்பட்டுவருகின்றது. ஜனாதிபதியாவதற்கு முன்னர் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஓரிரு சபைகளிலாவது வென்று ஆட்சி அமைத்திருக்க வேண்டும் அல்லவா? அத்தேர்தலில்கூட அவர்கள் மண்கவ்வினர்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சிஐடியில் ராஜபக்சக்களுக்கு எதிராக உள்ள விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. சரியான திசையை நோக்கி விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

எனவேதான் விசாரணை அதிகாரிகளுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நோக்கில், விசாரணையை திசை திருப்பும் வகையில் இப்படியான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அது பகல் கனவு மாத்திரமே.” -எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles