விசேட சுற்றிவளைப்பில் கண்டியில் 10 பேர் கைது

கண்டி பொலிஸார் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவு அதிகாரிகள் இணைந்து கண்டி, போகம்பர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் 4 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 39 கிராம் 265 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று (05) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles