தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த வெற்றியை மாபெரும் சாதனை என்று வர்ணித்துள்ள அவர், இது தொடர்பாக அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் சுமூகமான மற்றும் ஆழமான உறவை நான் இந்தத் தருணத்தில் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கின்றேன். உங்களது புதிய நிர்வாகத்தின் கீழ், இரு தரப்புக்கும் இடையிலான இந்த நட்பு ரீதியான உறவு மேலும் வலுவடைந்து தொடரும் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.” – என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

