ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலையில் ஒளிபரப்புகிறது நாசா

எதிர்வரும் ஆகஸ்ட் 12, புதன்கிழமை அன்று கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் அரிய ‘முழு சூரிய கிரகணம்’ (Total Solar Eclipse) தோன்றவுள்ளது.

இந்த கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கும் வகையில், நாசா (NASA) அமைப்பு தனது அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.nasa.gov/live) மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் வழியாக நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது.

பகுதி நேரச் சூரிய கிரகணம்

வட அரைக்கோளத்தில் உள்ள பிற பகுதிகளான அமெரிக்கா (அலாஸ்கா முதல் வட கரோலினா வரை), கனடாவின் பெரும்பகுதி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள மக்கள் இதனைப் ‘பகுதி நேரச் சூரிய கிரகணமாகக்’ காண முடியும்.

நாசாவின் அறிவியல் ஆராய்ச்சிகள்

கிரகணத்தின் போது நாசா பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.

சூரியனின் Corona பகுதியின் மாற்றங்களை ஆய்வு செய்ய, நாசாவின் நிதியுதவி பெற்ற ஆய்வுக் குழுவினர் WB-57 என்ற உயர் ரக ஆராய்ச்சி விமானம் மூலம் நிலவின் நிழலைப் பின்தொடர்ந்து சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.

‘தேசிய கிரகண பலூன் திட்டம்’ (Nationwide Eclipse Ballooning Project) மூலம், அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்களை ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினுக்கு அனுப்பி, கிரகணத்தின் போது பூமி வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய அறிவியல் பலூன்களை விண்ணில் செலுத்தவுள்ளனர்.

நேரலை மற்றும் சமூக ஊடகத் தகவல்கள்

பகல் 1:15 மணி: நேரலை ஒளிபரப்பு தொடங்கும்.

பகல் 1:45 மணி: ஐஸ்லாந்தில் முழு கிரகணம் (Totality) தொடங்கும்.

பகல் 2:28 மணி: ஸ்பெயினில் முழு கிரகணம் தொடங்கும்.

இந்த நேரலையின் போது, சமூக ஊடகங்கள் (X, Facebook, Instagram) வாயிலாக பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாசா நிபுணர்கள் பதிலளிக்கவுள்ளனர். மேலும், கிரகணம் முடிந்த சிறிது நேரத்திலேயே நாசாவின் பிளிக்கர் (Flickr) பக்கத்தில் புகைப்படங்கள் பதிவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles