ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நவம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவில் முக்கிய தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர், ஈரான் மீது புதிய இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த எச்சரிக்கைகளும், சாத்தியமான பதிலடி நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குத் தயாராகுமாறு தனது நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள புதிய அறிவுறுத்தல்களும், பிராந்தியத்தில் மீண்டும் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், வெள்ளை மாளிகையும் அமெரிக்க அதிகாரிகளும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளனர்.










