கந்தளாய் – அழுத்ஓயா பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வான் எதிர்திசையில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லொறியுடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கல்ஓயா பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தின் போது காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்கு காரணம் எனவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹதரஸ் கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
