விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட சுயாதீன அணி உறுப்பினர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.

விமல், உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இணைந்து எதிர்வரும் 4 ஆம் திகதி உருவாக்கவுள்ள புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” ராஜபக்சக்களை லீகுவான் எனவும், மீட்பார்கள் எனவும் பரப்புரைகளை முன்னெடுத்து மக்களை ஏமாற்றியதில் பெரும் பங்கு அவர்களுக்கும் உள்ளது. எனவே, நாடு இந்நிலைமைக்கு வருவதற்கு அவர்களும் காரணம்.
சுயாதீனமாக செயற்படும் உரிமை அவர்களுக்கு உள்ளது. ஆனால் நாட்டில் ஏற்பட்ட நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டும்.” – எனவும் சம்பிக்க குறிப்பிட்டார்.
