‘வில்லி’யாக அவதாரம் எடுக்கிறார் இடுப்பழகி சிம்ரன்!

தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரனுக்கு திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்புகள் இல்லை. இதனால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

அதன்பிறகு வில்லியாக மாறினார். சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் காளீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டினார். இப்போது பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்திலும் வில்லி வேடம் ஏற்றுள்ளார்.

இந்தியில் ஆயுஷ்மன் கொரோனா, ராதிகா ஆப்தே, தபு நடித்து வெற்றிபெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது. இதில் ஆயுஷ்மன் கொரோனா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். நடிகர் தியாகராஜன் இயக்குகிறார். படத்தில் வில்லன் இல்லை. அதற்கு பதிலாக சிம்ரனின் வில்லி கதாபாத்திரத்தை குரூரமாக சித்தரித்து உள்ளனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இந்தியில் தபு நடித்துள்ளார். சிம்ரன் கள்ளக்காதல் கொலையாளியாக நடிப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சில படங்களில் வில்லியாக நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளன.

Related Articles

Latest Articles