வீண் அச்சம் வேண்டாம்: எரிபொருள் கைவசம் உள்ளது!

ஈரான, இஸ்ரேல் போரால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு மேலதிகமாக மேலும் 4 எரிபொருள் கப்பல்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அராசங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈரான் – இஸ்ரேல் மோதலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 160 000 மெட்ரின் தொன் மசகு எண்ணெய் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் மேலும் 90 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டை வந்தடையவுள்ளது.

நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 4 மசகு எண்ணெய் கப்பல்கள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தோடு 246 200 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோல் , 5000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் , 193 250 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல், 10 500 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் என்பனவும் ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டு, அவை பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

தற்போது நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு போதுமானது என்பதோடு, இந்த முற்பதிவுகளும் இனிவரும் நாட்களில் கிடைக்கப் பெறவுள்ளன. எனவே மக்கள் வீண் அச்சம் கொண்டு, வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெற்று வீடுகளில் தேவைக்கதிகமாக களஞ்சியப்படுத்த வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles