நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற விபத்துகளில் குழந்தையொன்று உட்பட அறுவர் பலியாகியுள்ளனர்.
மஹிந்தலை பகுதியில் கெப் ரக வாகனமொன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
37 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அதிக வேகம் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டிய – அம்பலாங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், யாழ். உட்பட ஏனைய பகுதிகளில் மூவர் உயிரிழந்துள்ளனர்.