வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு,ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவோருக்கு, வழங்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவு இனி வழங்கப்பட மாட்டாது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு மட்டத்தினை விடவும் தற்போது அதிகரித்துள்ளது.

இதற்கமைய, நடைமுறை செலாவணி வீதம், வெளிநாட்டு வேலையாட்களின் வெளிநாட்டுச் செலாவணி பணவனுப்பல்களின் மீதும் ஏற்றுமதியாளர்களின் தேறிய வருவாய் மீதான உயர்ந்த ரூபா பெறுமதியின் மீதும் உயர் வருமானத்தினை வழங்குகிறது.

அத்துடன் இந்த மாதம் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற அந்நிய செலாவணியும் அதிகரித்துள்ளது.

எனவே இனி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles